திண்டுக்கல் அக், 17
ஜப்பான் கராத்தே ரியூ மார்ட்சியல் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஒருங்கிணைப்பு சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடந்த இப்போட்டியில், மதுரை, கோவை, நெல்லை, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கணைகள் பங்கேற்றனர்.
இப்போட்டிகள் ஓபன் சுற்று அடிப்படையில், கட்டா, குமித்தே, டீம் கட்டா ஆகிய பிரிவுகளில் நடந்தது. போட்டிகளை ஜப்பான் கராத்தே ரியூ மார்ட்சியல் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஒருங்கிணைப்பு தலைவர் ராஜகோபால் தொடங்கி வைத்தார். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. பரிசுகளை, விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்க மாவட்ட தலைவர் ஞானகுரு வழங்கி, வீரர்களை பாராட்டி பேசினார். இதில் கராத்தே முதன்மை பயிற்சியாளர்கள் முகமது அலி, அருள்குமார், தெய்வசிகாமணி, ஹக்கீம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.