எடின்பர்க் அக், 15
90’ஸ் கிட்ஸ்களின் விருப்பமான திரைப்பட தொடர் ஹரிபார்ட்டர். 7 புத்தகங்களை அடிப்படையாக கொண்டு ஹரிபார்ட்டர் தொடர் இதுவரை 8 திரைப்படங்களாக வெளியிடப்பட்டுள்ளது. ஹரிபார்ட்டர் திரைப்படங்களுக்கு உலக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது.
இதனிடையே, ஹரிபார்ட்டர் திரைப்பட தொடரில் ரூபியஸ் ஹஹ்ரிட் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலாமானவர் ஸ்காட்லாந்து நடிகர் ரூபி கால்ட்ரனி. 72 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரூபி கால்டரனி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.