Spread the love

மும்பை அக், 17

சினிமாவில் அறிமுகமான உடனே முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைப்பது எல்லாம் ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே நடக்கும். அப்படி சினிமாவில் எண்ட்ரி கொடுத்த சில வருடங்களிலேயே விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டின் கனவு தேவதையாக வலம் வந்தவர் ஹன்சிகா.

இந்நிலையில் நடிகை ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் பரவி வருகிறது. வருகிற டிசம்பர் மாதம் ஹன்சிகாவுக்கு திருமணம் நடக்க இருக்கிறதாம். அதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் தற்போது தடபுடலாக செய்து வருகிறார்களாம். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் தான் ஹன்சிகாவின் திருமணம் நடக்க உள்ளதாம்.

இதற்காக ஜெய்ப்பூரில் உள்ள பழங்காலத்து அரண்மனையை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவை திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை தொழிலதிபர் என்றும் அவர் திரைத்துறையை சேர்ந்தவர் இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது. இருப்பினும் அவர்களது திருமண தேதி இன்னும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *