விழுப்புரம் ஆகஸ்ட், 4
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் 33-வது மெகா தடுப்பூசி முகாம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் குந்தவிதேவி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆட்சியர் மோகன் பேசியதாவது:-
கொரோனா தடுப்பூசி முகாம் விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 7 ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 33-வது கொரோனா தடுப்பூசி முகாம் 2,033 இடங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் கடந்த மருத்துவமனை பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் கண்டிப்பாக ஊக்குவிப்பு தவணை (பூஸ்டர் டோஸ்) செலுத்திக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
#Vanakambharatham#Villupuramcollector#news