மயிலாடுதுறை அக், 13
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே ஆக்கூர், கிள்ளியூர், மாமாகுடி, காலகஷ்ணாதபுரம் உள்ளிட்ட அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் வெளிமாவட்டங்களில் உள்ள ஆலைகளுக்கும் அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் திருக்கடையூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. தற்போது மழை பெய்து வருவதால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி வருகிறது. கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.