கடலூர் அக், 13
கடலூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டப்பணிகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம், வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் தலைமை தாங்கி, அனைத்து துறை அலுவலர்களுடன் அரசு திட்டப்பணிகள் குறித்தும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.