கடலூர் அக், 11
கடலூர் உலக மனநல தினத்தை முன்னிட்டு கடலூர் டவுன்ஹால் அருகே மனநோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த பேரணியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் நடராஜன், நிலைய மருத்துவ அலுவலர் பாலகுமரன், மாவட்ட மனநல திட்ட அலுவலர் சத்தியமூர்த்தி, மனநல மருத்துவர்கள் கலையரசி, அஷ்வின் ஜோதி, தீபிகா, என்.எஸ்.எஸ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், ஒருங்கிணைப்பாளர் சந்தானம், அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் மலர்விழிவேலு மற்றும் ஆசிரியர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள், தொண்டு நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.