நெல்லை அக், 11
நெல்லை மாவட்டம் நாங்குநேரி யூனியன் தெற்கு நாங்கு நேரியை சேர்ந்த ஏராளமான பெண்கள் காலிகுடங்களுடன் வந்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுத்தனர். அதில் கூறியுள்ளதாவது:-
தெற்கு நாங்குநேரி ஊராட்சியில் சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு வாரம் ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதிலும் உப்பு தண்ணீர் கலந்தும், புழுக்களுடன் விநியோகிக்கபட்டு வருகிறது. இதனால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
சுத்தமான குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
