நெல்லை அக், 11
நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள வி.கே.புரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன, வி.கே.புரம் நகராட்சி பகுதி வழியாக தாமிரபரணி ஆறும், கால்வாய்களும் செல்கின்றன. மேலும் நகராட்சிக்குட்பட்ட மைய பகுதியில் கழிவு நீரோடைகளும் உள்ளன.
இந்த நீரோடைகளில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வி.கே.புரம் நகராட்சி புதிய முயற்சியை எடுத்துள்ளது. அதாவது நீர்நிலைகள், ஓடைகளில் குப்பை கொட்டுவோரின் புகைப்படம் எடுத்து அனுப்பவோருக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும், அவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும், குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், நகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் குப்பை கொட்டும் சுமார் 10 -க்கும் மேற்பட்ட நகராட்சி பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியினர், குப்பைகள் கொட்டுவதற்கு குப்பை தொட்டிகள் வைத்தால் தொட்டியில் குப்பைகளை கொட்டிவிடுவோம் என்றனர்.
