சென்னை அக், 11
பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம், வயது முதிர்வு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93.
நெல்லை மாவட்டம் சத்திர புதுக்குளத்தை சேர்ந்த சுப்பு ஆறுமுகம், சுதந்திர போராட்ட காலத்தில் தனது வில்லுப்பாட்டின் மூலமாக மக்களிடையே தேச ஒற்றுமையை வளர்த்து வந்தார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லிசை கச்சேரிகளை நடத்தி வந்தார். பள்ளி-கல்லூரிகளில் பல நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை வில்லுப்பாட்டின் வழியாக மக்களுக்கு எடுத்து கூறியவர்.
மேலும் இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும், மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் விருதையும் பெற்றார். 2021-ம் ஆண்டு மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்தது.
திரைப்படங்களிலும் சில நகைச்சுவை பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதியுள்ளார். மேலும் சினிமா காட்சிகளிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கே.கே.நகர் இல்லத்திலேயே ஓய்வில் இருந்து வந்த அவர், நேற்று மரணம் அடைந்தார்.
இவரது மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்