சென்னை அக், 11
சிப்காட் நிறுவனத்திற்கும், பிரிட்டிஷ் துணை உயர் ஆணையரகம் மற்றும் அண்ணா பல்கலை இடையே, தொழில்நுட்ப உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது.
இந்த ஒப்பந்தம், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வருங்கால நகர்திறன் பூங்காவுக்கான தொலைநோக்கு பார்வை மற்றும் முதன்மை திட்டம் தயாரிக்கவும், உள்கட்டமைப்பு வசதி, ஆளுமை கட்டமைப்புகள் வரையறுக்கவும், சிப்காட் நிறுவனத்திற்கு, பிரிட்டிஷ் துணை உயர் ஆணையரகம் உதவும்.
சிப்காட் நிறுவனம், அண்ணா பல்கலையை தொழில்நுட்ப பங்குதாரராக நியமித்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று மேற்கொள்ளப்பட்டது.