Spread the love

சென்னை அக், 10

தமிழக காவல் தலைமை இயக்குனரின் ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டை மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதானவர்களில் 221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகளாக இருந்தவர்கள். 110 பேர் மீது பிடி ஆணைகள் நிலுவையில் இருந்தன. தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள பல ரவுடிகள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மீதி உள்ள ரவுடிகளிடம் காவல் துறையினர் நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டது.

இதன் பிறகு எவ்வித குற்ற செயல்களிலும் ஈடுபடமாட்டேன் என அவர்கள் காவல்துறையிடம் எழுதி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் உறுதிமொழியை மீறும்போது, அவர்களை சிறையில் அடக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. மொத்தத்தில் 331 ரவுடிகள் சிறையில் அடக்கப்பட்டு உள்ளனர். பிடிபட்டவர்களில் 979 ரவுடிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டது என்றும், அவர்கள் அதை மீறினால் 6 மாதம் சிறையில் அடைக்கப்படுவர் என்றும் காவல்துறை தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *