கரூர் அக், 8
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக ஏற்கனவே பணியாற்றி வந்த முத்துச்செல்வன் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வராக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கண் மருத்துவத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி பதவி உயர்வு பெற்ற சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.
எனவே அவர் நேற்று கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வராக நேற்று பொறுப்பேற்று கொண்டார். மேலும் அவருக்கு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.