விழுப்புரம் அக், 1
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் மோகன், சட்ட மன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டம், ஜல்ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரியின் கிராமச்சாலைகள் திட்டம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைக்கப்பட்ட மின் மேம்பாட்டு திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய பயிர் பாதுகாப்பு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார் கேட்டறிந்தார்.