புதுக்கோட்டை செப், 29
ஊர்க்காவல் படை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு முகாம் நேற்று முதல் தொடங்கியது. இதில் சேர இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் புதுக்கோட்டையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேற்று குவிந்தனர்.
முன்னதாக விண்ணப்ப படிவங்கள் வினியோகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே தனது அலுவலகத்தில் வைத்து தொடங்கி வைத்தார். அப்போது ஊர்க்காவல் படை அதிகாரி அழகுமணியன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.