கிருஷ்ணகிரி செப், 26
பொதுமக்கள் அச்சமின்றி பணியாற்றவும், மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும், நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் கொடி அணி வகுப்பு நடத்தினர். அதன்படி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் நடந்த கொடி அணிவகுப்பை கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர் தமிழரசி தொடங்கி வைத்தார்.
இந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட காவல் துறையினர் பெங்களூரு சாலை வழியாக தாலுகா அலுவலகம் வரை சென்று பின்னர் மீண்டும் புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர். இதில் டவுன் காவல் ஆய்வாளர் கபிலன், துணை ஆய்வாளர் சிவசந்தர், நவுசாத், பார்த்திபன், அமர்நாத், போக்குவரத்து துணை ஆய்வாளர் சீதாராமன் உள்பட 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.