Spread the love

செங்கல்பட்டு செப், 23

அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை சார்பில், மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களின் சார்பில் 614 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

இதில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். காஞ்சிபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.மஸ்தான் ஆகியோர் கலந்துக் கொண்டு ரூ.57 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *