தர்மபுரி செப், 22
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட ஜாலிப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தலைமை தாங்கி 141 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பூங்கொடி சேகர், தலைமை ஆசிரியர் கவுதம், ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், முருகன், சேகர், ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா தேவராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் சக்திவேல், முருகேசன், சூடாமணி, முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.