ராணிப்பேட்டை செப், 21
மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி 67 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார். 21 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் பதிவு, 65 புதிய பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பதிவு, 62 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டது.
இம்முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள், மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்