செங்கல்பட்டு செப், 16
மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் இன்று காலை அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். செங்கல்பட்டில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். உடன் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் பொது மக்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அதிமுக கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது