மதுரை செப், 15
மதுரையில் உள்ள அரசுப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் தனது உரையில், அமைச்சர்கள் வேலு, பெரியகருப்பன், கீதா ஜீவன், மூர்த்தி, கணேசன், பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், மேயர் இந்திராணி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கிரிராஜன், கலாநிதி வீராசாமி, வெங்கடேசன், பூமிநாதன், சமூக சேவகி கமலாத்தாள் உள்ளிட்டோரை வரவேற்கிறேன். என் வாழ்வின் பொன்னாளாக இந்த நாள் அமைந்துள்ளது.
பசித்தோறுக்கு உணவு அளிக்கும் கருணை வடிவமான திட்டம் தான் இத்திட்டம். பள்ளிக்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு முதலில் உணவை வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளின் ஆதி மூலத்தை கண்டறிவதற்காக இந்த ஆதி மூலம் பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். அண்ணாவின் பிறந்த நாளில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தது பெருமை அளிக்கிறது என கூறினார்.