Spread the love

நெல்லை ஆகஸ்ட், 1

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தெற்கு விஜய நாராயணம் மெயின் ரோட்டில் உள்ள மேத்தா பிள்ளை அப்பா பள்ளி உள்ளது இந்தப் பள்ளிலில் ஆடி மாதம் 16ம் தேதி கந்தூரி விழா நடப்பது வழக்கம். கடந்த இரு வருடங்கள் கொரோனா தாக்கத்தின் காரணமாக தந்தூரி விழாக்கு பொதுமக்கள் வருகை குறைந்த நிலையில் நேற்று நடந்த கந்தூரி விழாவுக்கு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து கந்தூரி விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த விழா இந்து மற்றும் முஸ்லிம்களின் ஒற்றுமையை பறைசாற்று இதயத்தில் அமைந்துள்ளது பள்ளியில் கொடி ஊர்வலம் நடந்தது இதில் மேத்தா பிள்ளையப்பா பிறந்த வீடான அவரது வீட்டில் இருந்து கொடி அனைத்துவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து தெருக்களில் கொண்டுவரும் கொடிக்கம்பத்திற்கு இந்துக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி வீட்டின் வாசலில் குடத்தில் வைத்திருந்த மஞ்சள் கலந்த நீரை விட்டு வழிபட்டனர்.

செய்தி:

திரு. ஜான் பீட்டர்.

நெல்லை மாவட்ட செய்தியாளர்.

#Vanakambharatham#nellai#news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *