சென்னை ஆகஸ்ட், 1
அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரனை சசிகலா சந்தித்துள்ள நிலையில் நாளை அவர் யாரை சந்திப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையில் அசோக் நகரில் உள்ள மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமசந்திரனை சசிகலா மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
பண்ருட்டியாரை பார்த்தது போல் சசிகலா தனது அரசியல் பயணத்தில் நிறைய மூத்த தலைவர்களையும் நிர்வாகிகளையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவரது பயணத்தில் அவருக்கு ஏதேனும் சிறிய ஒளி கிடைத்தாலும் அது அவரது முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான். பண்ருட்டியாருடனான சசிகலாவின் சந்திப்பு குறித்து எடப்பாடிப ழனிசாமி தரப்பினர் சிலரிடம் கேட்ட போது, ‘தனது இருப்பை காட்டிக் கொள்வதற்காக இந்த பயணத்தை தொடங்கியுள்ள சசிகலாவுக்கு எந்த பலனும் கிடைக்காது ‘ என எடப்பாடி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
#Vanakambharatham#Sasikala#news