சென்னை ஆகஸ்ட், 1
காவல்துறையில் சிறப்பாக சேவையாற்றி வரும் மாநிலங்களுக்கு மிக உயர்ந்த கவுரவமாக கருதப்படும் ஜனாதிபதி யின் சிறப்பு கொடி வழங்கப்படுகிறது.
தமிழக காவல் துறைக்கு இந்த கொடி கடந்த 2009-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களால் அப்போது வழங்கப்படவில்லை.
13 ஆண்டுகள் கழித்து ஜனாதிபதியின் வண்ணக்கொடி வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு ஜனாதிபதியின் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். பின்னர் இந்த கொடியின் சின்னத்தையும் வழங்கினார். கொடியை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் அதனை காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபுவிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து இந்திய தபால் துறை தலைமை அதிகாரி செல்வக்குமார் முன்னிலையில் ஜனாதிபதி கொடியின் சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. இதனை வெங்கையா நாயுடு வெளியிட மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்