ராணிப்பேட்டை செப், 13
புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராணிப்பேட்டை மாவட்ட பிரிவு சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டி நடைபெற்றது. இதனை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி கொடியசைத்து தொடக்கி வைத்தார்கள்.
உடன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயுலின் ஜான், நகர்மன்ற உறுப்பினர் வினோத் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளனர்.