கிருஷ்ணகிரி செப், 13
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அருந்ததியர் முன்னேற்ற நலச்சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில், ஆலப்பட்டி கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டா கேட்டு மனு அளித்தனர். மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.