நெல்லை செப், 12
நெல்லை மாவட்டம் வட்டார அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. நாளை வரை 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஓட்டப்பந்தயம், நீளம் தாணடுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட 16 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் வட்டார அளவிலான 49 பள்ளிகளை சேர்ந்த சுமார் 800 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இன்று கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு 16 வகையான போட்டிகள் நடைபெற்றது.
2-ம் நாளான நாளை மாலை வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
பரிசளிப்பு விழாவில் நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் போட்டிக்கான ஏற்பாடு களை மேலப்பாளையம் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியை அமலா மற்றும் ஆசிரியர்கள் செய்துள்ளனர்.