திருப்பத்தூர் செப், 12
மாடப்பள்ளி ஊராட்சியில் திருப்பத்தூர் மாவட்ட கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலக கட்டிடம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. அகரம், தாதவள்ளி, சமுத்திரம், கிருஷ்ணாபுரம், கோனேரிக்குப்பம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்த நூலகத்துக்கு வந்து செல்கிறார்கள்.
எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், மாணவ- மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்