கரூர் செப், 10
குளித்தலை நகரப்பகுதிக்கு உட்பட்ட சுங்ககேட் முதல் பெரியபாலம் பகுதி வரையில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று குளித்தலை நெடுஞ்சாலைத்துறை மூலம் கடை உரிமையாளர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கரூர்- திருச்சி மாநில நெடுஞ்சாலையில் குளித்தலை சுங்ககேட் முதல் பெரியபாலம் வரை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட உள்ளதாகவும், இப்பணிகள் உரிய பாதுகாப்புடன் நடைபெற பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் கோட்டாட்சியருக்கு குளித்தலை நெடுஞ்சாலை துறை அதிகாரி மூலம் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இதையடுத்த நெடுஞ்சாலை துறையின் உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமரன் முன்னிலையில், குளித்தலை பஸ் நிலையம் பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று தொடங்கப்பட்டது.