திண்டுக்கல் செப், 7
திண்டுக்கல் மாவட்டம் பழனி – கொடைக்கானல் பகுதியில் கன மழை காரணமாக பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலைச்சாலையில் சேதம் அடைந்தது.
அதனால் அப்பகுதியில் ஒரு வாரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரின் போர்க்கால நடவடிக்கை தொடர்ந்து அந்த மண் சரிவை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஈடுபட்டதையடுத்து ஓரளவு சாலை சீரமைக்கப்பட்டு தற்போது சிறிய ரக வாகனங்கள் மட்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.