சிவகங்கை செப், 4
திருப்புவனத்தில் உள்ள தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க உறுப்பினர்களுக்கு மதுரை தனியார் டிரஸ்ட், தனியார் மருத்துவமனையும் இணைந்து இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தியது. சங்க அலுவலகத்தில் நடைபெற்ற முகாமிற்கு தலைவர் திரவியம் தலைமை தாங்கினார்.
இதையொட்டி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. மேலும் மருத்துவ குழுவினரால் உரிய மருந்துகளும் மற்றும் ஆலோசனையும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சங்க செயலாளர் ராமகிருஷ்ணானந்தம், பொருளாளர் நீலமேகம் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.