Spread the love

சிவகங்கை ஆக, 27

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டிதலைமையில் நடந்தது.

இதில் பயிர்க்காப்பீடு, ஜிப்சம் உரம் வழங்க கோருதல், பிரதமரின் கிஷான் திட்டத்தில் நிதி பெற்றுத்தரக் கோருதல், பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் தொகை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு மானியத்துடன் தலா ரூ.21 ஆயிரத்து 432 வீதம் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 160 மதிப்பீட்டில் மின்சாரத்தால் இயங்கும் புல் வெட்டும் கருவிகள் மற்றும் கூட்டுறவுத்துறையின் சார்பில் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 51 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 12ஆயிரத்து 852 மதிப்பிலான பயிர்க்கடனுதவிகள் மற்றும் செம்மறி ஆடுகள், கறவை மாடு என மொத்தம் 56 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 20 ஆயிரத்து 12 மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்மணிவண்ணன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபாலன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீனு, கால்நடைப் பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நாகநாதன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா, பிரபாகரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளர் சர்மிளா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *