சேலம் செப்டம்பர், 4
சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் மணிமேகலை தெருவில் வசதி வருபவர் ராஜகோபால் இவரது மகன் ஹரிபாஸ்கர் என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மேல்சாத்து வஸ்திர சேவை என்ற தரிசனத்திற்காக இரண்டு பேருக்கு ரூ.22250 கட்டி பதிவு செய்தனர்.
அப்போது அவர்களுக்கு என்ன நம்பர் ஒதுக்கப்பட்டது 2020 ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி தரிசனத்திற்கு ஒதுக்கப்பட்ட ரசீதும் குறிப்பிட்டு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி மேல் சாத்து வஸ்த்திர சேவை இந்த தரிசனம் செய்ய வேறு தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் ஒன்றரை வருடம் காத்திருந்தும் தரித்தணம் செய்ய வாய்ப்பளிக்கப்படவில்லை எனவே தேவஸ்தானம் மீது சேலம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி திருப்பதி தேவஸ்தானம் ஒரு வருட காலத்தில் மனுதாரருக்கு மேல் சாத்துவாஸ்த்திர சேவை என்ற தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக ரூபாய் 45 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும் இந்த தரிசனத்திற்காக கட்டியதொகை ரூ.22,250 தொகையையும் உத்தரவு பிறப்பித்த இரண்டு மாத காலத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் 6% வட்டியுடன் சேர்த்து தர வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.