தென்காசி செப், 2
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள கீழ ஆம்பூர் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் ராமசாமி வயது 50 , இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். மேலும் இவர் கடந்த 23 ஆண்டுகளாக மின்சாரவாரிய அலுவலகத்தில் ஒப்பந்த பணியளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 13 ம் தேதி ராமசாமி ஆழ்வார்குறிச்சி அடுத்த கருத்தபிள்ளையூர் என்ற கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி லயனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பி ராமசாமி மீது உரியதாக கூறப்படுகிறது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட ராமசாமிக்கு கால், முதுகு, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது உடனே அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது வரை தொடர்ந்து அவர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இந்த விபத்து நடந்து சுமார் 20 நாட்கள் கடந்த நிலையில் இன்று அவருக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ராமசாமிக்கு நிவாரணம் வழங்கக்கோரி ஆழ்வார்குறிச்சி மின்சார அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் அலுவலகத்தில் உள்ளிருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர். ராமசாமிக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும், இன்று வேலைக்கு செல்லாமல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.