திண்டுக்கல் செப், 1
குளிர்பதன கிடங்கு ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக அரசிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்க அரசு முடிவு செய்தது.
மேலும் இதற்காக ரூ.5 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு குளிர்பதன கிடங்குக்கான கட்டுமான பணிகளும் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. 1,000 டன் காய்கறிகளை இருப்பு வைக்கும் வகையில் இந்த குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் ஆய்வு இந்த நிலையில் வேளாண்மைத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் குளிர்பதன கிடங்கு கட்டுமான பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.