திருவனந்தபுரம் செப், 1
பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக இன்று வருகிறார். இதற்காக இன்று மாலை 4 மணிக்கு கொச்சிக்கு விமானம் மூலம் வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படு கிறது.
இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் மங்களூரு புறப்பட்டு செல்கிறார். அங்கு துறைமுக மேம்பாடு உள்பட ரூ.3,800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதைத்தொடர்ந்து அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி கேரளாவில் பலத்த காவலர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.