வேலூர் ஆக, 31
வேலூர்மாவட்டம், காட்பாடியில் தமிழக ஆந்திரா எல்லையான கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் படி பொது இடங்களில் 10 அடிக்கு மேல் விநயாகர் சிலைகள் வைக்க கூடாது என்பதால் 10 அடிக்கு குறைவாக உள்ள விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரிலிருந்து டிராக்டர்கள் வேன் லாரிகள் மூலம் 10 அடிக்கு மேல் உள்ள விநாயகர் சிலைகளை மக்கள் பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்ய வாங்கி வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாக அறிவுறுத்தியதை விட சிலைகள் பெரிய அளவில் இருப்பதால் அவைகளை காவல்துறையினர் திருப்பி அனுப்பினார்கள்.