சென்னை நவ, 23
நாடு முழுவதும் இந்த மாத இறுதிக்குள் 370 பெட்டிகளில் ஆயிரம் முன்பதிவு இல்லா புது பெட்டிகளை இணைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில் தெற்கு ரயில்வேயால் 51 ரயில்களில் பெட்டிகளை இணைக்கும் பணி நடைபெறுகிறது. இதில் இதுவரை சென்னை-தூத்துக்குடி, சென்னை-டெல்லி, குமரி-ஹவுரா உள்ளிட்ட 27 ரயில்களில் 79 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. இதனால் 56 ஆயிரம் பேர் கூடுதலாக பயணிக்க முடியும்.