சென்னை அக், 1
வணிகப் பயன்பாடு சிலிண்டர் விலை 48 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் அதன் விலை ரூ.1903 ஆக விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வணிகப் பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.7.50 காசுகள் உயர்த்தப்பட்டு, 1817 ரூபாய்க்கு விற்பனையானது. இதையடுத்து செப்டம்பர் 1-ம் தேதி 38 ரூபாய் உயர்த்தப்பட்டு, 1855 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.