சென்னை செப், 30
வினோத் இயக்க உள்ள விஜயின் 69 வது படம் கமர்சியல் கலந்த அரசியல் படமாக உருவாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் விஜயின் கட்சிக்கொடி பயன்படுத்தப்படும் எனவும் அவரது அரசியல் கொள்கைகள் பற்றி பேசப்படும் என்றும் கூறப்படுகிறது. அக்டோபர் 27ம் தேதி விக்ரவாண்டியில் நடக்கவிருக்கின்ற அரசியல் மாநாடு முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவோம் என கூறப்பட்டுள்ளது.