சென்னை செப், 29
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறை துணை முதல்வராக பொறுப்பேற்றவர் ஸ்டாலின்தான். அவருக்கு அடுத்ததாக இபிஎஸ் ஆட்சியில் ஓபிஎஸ் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். தற்போது மூன்றாவது நபராக உதயநிதி இப்பதவி ஏற்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் துணை முதல்வர் பொறுப்பு குறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கேபினட் அமைச்சருக்கு இணையாக மதிக்கப்படக்கூடிய பொறுப்பாக துணை முதல்வர் பதவி இருக்கிறது.