புதுடெல்லி செப், 18
சமையல் எண்ணெய் விலையை உயர்த்த கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை சரிந்ததால் இந்தியாவில் எண்ணெய் இறக்குமதி அதிகரித்தது. இந்நிலையில் உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி பாமாயில், சோயா, சூரியகாந்தி ஆகியவற்றின் இறக்குமதி வரியை அரசு 20% உயர்த்தியது. இதை காரணம் காட்டி சுத்திகரிப்பு நிறுவனங்கள் விலையை உயர்த்த கூடாது என அரசு அறிவித்துள்ளது.