சென்னை செப், 17
மிலாடி நபியை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றிற்கும் இன்று விடுமுறையாகும். அதே போல் தமிழகம் முழுவதும் இன்று அனைத்து வங்கிகளும், ரேஷன் கடைகளும் இயங்காது. குறிப்பாக டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.