சென்னை ஆக, 26
தமிழகத்தில் உள்ள 25 சுங்க சாவடிகளில் வருகிற 1-ம் தேதி முதல் டோல்கேட் கட்டணம் உயர்கிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பரில் இக்கட்டணம் உயர்த்தப்படும். அதன்படி கடந்த ஏப்ரல் அமலாக இருந்த கட்டண உயர்வு தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு ஜூனில் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து வருகிற செப்டம்பர் 1-ல் 5% முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.