கீழக்கரை ஆக, 27
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த 360 ஆண்டுகளுக்கு முன்பு அரபி பள்ளிக்கூடம் துவங்கி பாடம் நடத்திய ஆசிரியர் மகான் சதக்கத்துல்லா அப்பா அவர்களின் கல்விப்பணியை நினைவு கூறும் வகையில் வருடம்தோறும் அவர்களின் மறைவு நாள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக கீழக்கரை மேலத்தெருவில் இருக்கும் மகான் சதக்கத்துல்லா அப்பா அவர்களின் அரபி பள்ளிக்கூடத்தில் பத்து நாட்கள் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்லும் மஜ்லிஸ் நிகழ்வுகள் நடைபெற்றன.
நிறைவு நாளன்று மாவட்ட அரசு ஹாஜியும் அரூஸிய்யா தைக்கா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மௌலானா,மௌலவி,அல்ஹாஜ் சலாஹுதீன் ஆலிம்,மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் M.K.E.உமர் அப்துல் காதர்,அல்மஸ்ஜிதுர்ரய்யான் A/C பஜார் பள்ளி தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி,ஜமாத்துல் உலமா சபை ஆலிம்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியினை TPS சுலைமான் காக்கா சிறப்பாக நடைபெறும் வகையில் ஏற்பாடுகளை செய்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.