சென்னை ஆக, 25
நாடு முழுவதும் உள்ள 4.30 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இன்று சுழல் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொகையை விடுவிக்கும் பிரதமர் மோடி 2.35 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் பயன்பெறும் வகையில் 5000 கோடி கடன் உதவியும் வழங்குகிறார். மகளிர் சுய உதவி குழுக்களில் நிதி மேலாண்மை, கடன் மேலாண்மை திறன் மற்றும் தொகுப்பு நிதி ஆகியவற்றை மேம்படுத்த இந்த சுழல் நிதி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.