சென்னை ஆக, 25
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.