சீனா ஆக, 5
சீன முதலீடுகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அமைச்சர் பியூஷ்கோயல் விளக்கமளித்துள்ளார். சீன முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என பொருளாதார ஆய்வு அறிக்கை கூறப்பட்டிருந்ததை அரசின் நிலைப்பாடாக எடுத்துக் கொள்ளக் கூடாது என கூறிய அவர், எல்லை பிரச்சனையில் தீர்வு காணும் வரை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது தவிர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.