புதுடெல்லி ஆக, 4
ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைய இருந்த பாரத் அரிசி விற்பனை, மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என மத்திய அமைச்சர் பிரகலாத்ஜோஷி கூறியுள்ளார். மாநிலங்கள் தங்கள் நலத்திட்ட உதவிகளுக்கு தேவைப்படும் அரிசியை இந்த உணவு கழகத்திடமிருந்து குவிண்டாலுக்கு 2800 என்ற விலையில் நேரடியாக வாங்கிக் கொள்ளலாம் என கூறியவர் மின்னணு எஏலத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.