புதுடெல்லி ஜூலை, 26
தமிழ்நாடு, கர்நாடகா, அசாம் மாநிலங்களில் தீயணைப்புத்துறை விரிவாக்கத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் பேரிடர் தணிப்பு திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து ரூ.810 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மும்பை, கொல்கத்தா, பூனே உள்ளிட்ட நகரங்களில் வெள்ள மேலாண்மைக்கு ரூ.2,514 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.